உள்ளூர் செய்திகள்

பிரேத பரிசோதனைகள் செய்யாமல் அலைக்கழிப்பு

Published On 2023-11-19 08:34 GMT   |   Update On 2023-11-19 08:34 GMT
  • செங்கம் அரசு மருத்துவமனையில் அவலம்
  • டாக்டர்களை நியமிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

புதுப்பாளையம்:

செங்கம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மருத்துவ தேவைகளுக்காக செங்கம் தலைமை அரசு மருத்துவமனைக்கு செல்கின்றனர்.

குறிப்பாக நாய்க்கடி, பாம்பு கடி, உள்பட அவசர சிகிச்சை பிரிவு வரை பொதுமக்கள் மருத்துவ மனைக்கு வருகின்றனர்.

ஆனால் செங்கம் தலைமை அரசு மருத்துவ மனையில் பல்வேறு சமயங்களில் மருத்துவர் பற்றாக்குறையால் மருத்துவர்கள் வரும் வரை பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

மேலும் செங்கம் சுற்று வட்ட பகுதிகளில் நடைபெறும் விபத்துகளில் உயிர் சேதம் ஏற்பட்டால் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யாமல் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுமாறு மருத்துவ மனையில் பரிந்துரை செய்யப்படுகிறது.

குறிப்பாக கடந்த ஒரு வருடமாகவே செங்கம் பகுதிகளில் நடக்கும் விபத்துகளில் உயரிழந்த வர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வந்தும் பிரேத பரிசோதனை செய்யாமல் திருவண்ணா மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனால் உயிரிழந்த வர்களின் உறவினர்கள் உட்பட காவல்துறையினர் என பலதரப்பட்ட மக்கள் இதனால் பாதிக்கப்ப டுகின்றனர்.

செங்கத்திலிருந்து திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்து உடலை மீண்டும் கொண்டு வருவதற்கு 2 நாள் வரை காத்திருக்க வேண்டிய சூழலும் நிலவுகிறது.

எனவே கூடுதல் மருத்துவர்களை நியமித்து செங்கம் அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து வசதிகளையும் உடனுக்குடன் செயல்படுத்திட வேண்டும் எனவும் பிரேத பரிசோதனைகளை செங்கம் அரசு தலைமை மருத்துவ மனையில் உடனுக்குடன் செய்து மக்களை சிரமத்திற்கு ஆளாக்காமல் இருக்க உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News