உள்ளூர் செய்திகள்

சிந்தாதிரிப்பேட்டையில் வேலைக்கு சேர்ந்த 3 வாரத்தில் 26 பவுன் திருட்டு- வாலிபர் கைது

Published On 2023-08-12 08:07 GMT   |   Update On 2023-08-12 08:07 GMT
  • கடந்த 3 வாரங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்த ராபர்ட் வீட்டில் இருந்த 26 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
  • சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ராபர்ட்டை கைது செய்தனர்.

சென்னை:

சென்னை சிந்தாதிரிப்பேட்டை புதிய பங்களா தெருவை சேர்ந்தவர் ஷாலினி. இவர் செயலி ஒன்றின் மூலமாக பெரும் பாக்கத்தை சேர்ந்த ராபர்ட் என்ற வாலிபரை வேலைக்கு சேர்த்திருந்தார்.

கடந்த 3 வாரங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்த ராபர்ட் வீட்டில் இருந்த 26 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ராபர்ட்டை கைது செய்தனர்.

Tags:    

Similar News