உள்ளூர் செய்திகள்

மெட்ரோ ரெயிலில் பயணிகள் எண்ணிக்கை இருமடங்கு உயர்வு

Published On 2022-06-07 11:27 GMT   |   Update On 2022-06-07 11:27 GMT
  • மெட்ரோ ரெயிலில் டிக்கெட் கட்டணம் மின்சார ரெயிலை விட கூடுதல் என்பதால் பயணிகளிடம் ஆரம்பத்தில் வரவேற்பு குறைவாகவே இருந்தது.
  • பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வருமானமும் அதிகரித்து வருகிறது.

சென்னை:

சென்னையில் விம்கோ நகரில் இருந்து விமான நிலையம் வரை 32 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு வழித்தடத்திலும், சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை 21.96 கிலோ மீட்டர் தூரத்துக்கு மற்றொரு வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

மெட்ரோ ரெயிலில் டிக்கெட் கட்டணம் மின்சார ரெயிலை விட கூடுதல் என்பதால் பயணிகளிடம் ஆரம்பத்தில் வரவேற்பு குறைவாகவே இருந்தது. குளிர்சாதன வசதியுடன் சொகுசான போக்குவரத்தாக இருப்பதால் பயணிகளிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் 25.19 லட்சம் பயணிகள் பயணம் செய்தனர். பிப்ரவரி மாதம் 31.86 லட்சமாக உயர்ந்தது. பின்னர் மார்ச் மாதம் 44.67 லட்சமாக உயர்ந்தது. கடந்த மே மாதம் இருமடங்காக அதிகரித்துள்ளது. அதாவது 47.9 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வருமானமும் அதிகரித்து வருகிறது.

Tags:    

Similar News