உள்ளூர் செய்திகள்

நெமிலி கிரேன் விபத்தில் 4 பேர் பலியான சம்பவத்தில் மேலும் 6 பேர் கைது

Published On 2023-01-30 09:36 GMT   |   Update On 2023-01-30 09:36 GMT
  • குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் சிக்கினர்
  • போலீசார் விசாரணை

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் திரவுபதி அம்மன் மற்றும் மண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பொங்கல் பண்டிகை முடிந்து, கடந்த 22 -ந் தேதி இரவு மயிலேறு திருவிழா நடைபெற்றது.

இதில், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த கிரேன் மூலமாக தொங்கியபடி வந்து, அம்மனுக்கு மாலை அணிவிக்க வந்தனர்.

அப்போது, கிரேன் கவிழ்ந்து விழுந்த விபத்தில் பெரப்பேரி காலனியை சேர்ந்த சின்னசாமி (வயது 73), கீழ்வீதி ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த முத்துகுமார் (42), கீழ்வீதியைச் சேர்ந்த ஜோதிபாபு (17), கீழ்ஆவாதம் பகுதியைச் சேர்ந்த பூபாலன் (48) ஆகியோர் இறந்தனர்.

இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரேன் டிரைவர் பனப்பாக்கத்தை சேர்ந்த முருகன் என்பவரை ஏற்கனவே கைது செய்து இருந்தனர்.

மேலும், இந்த வழக்கில் கிரேன் உரிமையாளர் அருண் (27) மற்றும் விழாக்குழுவினர் சதீஷ் (21), படையப்பா (24), ராமதாஸ் (32), கண்ணன் (28), கலைவாணன் (26) ஆகிய 6 பேர் தேடப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், நேற்று அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News