உள்ளூர் செய்திகள்

ரெயில் நிலையங்களில் டிஜிட்டல் அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும்

Published On 2022-06-16 08:33 GMT   |   Update On 2022-06-16 08:33 GMT
  • ரெயில் நிலையங்களில் டிஜிட்டல் அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
  • பெட்டிகள் நிற்கும் இடத்தை அடையாளம் காணும் வகையில் உள்ள டிஜிட்டல் போர்டு வசதி ஏற்படுத்தவில்லை.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், ராம நாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட இடங்களில் ரெயில் நிலையங்கள் உள்ளன. இந்த வழித்தடத்தில் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படு கின்றன.

ஆனால் இங்கு பெட்டிகள் நிற்கும் இடத்தை அடையாளம் காணும் வகையில் உள்ள டிஜிட்டல் போர்டு வசதி ஏற்படுத்தவில்லை. இதனால் பயணிகள் ரெயில் வந்து நிற்கும் நேரத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிகளை கண்டுபிடிக்க பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

பயணிகள் சுலபமாக தங்களுக்கான பெட்டியில் ஏறும் வகையில் டிஜிட்டல் அறிவிப்பு பலகை வசதியை ஏற்படுத்தி தர ரெயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும். பொதுமக்கள் பஸ் பயணத்தை விட ரெயில் பயணத்திற்கு தான் முன்னுரிமை கொடுக்கி ன்றனர். குறிப்பாக வயதான வர்கள், பெண்கள் பய ணிக்க ரெயில் பயணமே சிறந்ததாக உள்ளது. ரெயில் பயணத்தில் டிக்கெட் கட்டணமும் குறைவாக இருப்பதால் நடுத்தர மக்கள் பெரிதும் பயன் படுத்தி வருகின்றனர்.

குடும்பத்துடன் வெளியூர் சென்று வரலாம் என நினைத்து வருபவர்களுக்கு ரெயில் நிலையங்களில் பெட்டிகள் நிற்கும் இடத்தை காட்டும் அறிவிப்பு பலகைகள் இல்லாததால் பதட்டத்துடன் இருக்க வேண்டி உள்ளது. முதியோர்கள் பெட்டி நிற்கும் இடத்தை சரியாக அடையாளம் காண முடியவில்லை. எனவே பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில் குறிப்பிட்ட பெட்டி இங்கு தான் நிற்கும் என்பதை தெளிவாக காட்டும் வகையில் டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் நிறுவ ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News