உள்ளூர் செய்திகள்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பனை கருத்தரங்கம்

Published On 2023-10-13 08:52 GMT   |   Update On 2023-10-13 08:52 GMT
  • ஆதித்தனார் கல்லூரியில் "பனை வளம் காப்போம்" என்ற தலைப்பில் மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.
  • நிகழ்ச்சியின் முடிவில் மாணவர்கள் சார்பாக பனைவிதைகள் விதைக்கப்பட்டது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட அணி 43 மற்றும் 44-வது அணிகளின் சார்பில் "பனை வளம் காப்போம்" என்ற தலைப்பில் மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணிதிட்ட அணி எண் 44-ன் திட்ட அலுவலர் சத்தியலெட்சுமி வரவேற்று பேசினார்.

இதில் தூத்துக்குடி மதர் சமூக சேவை நிறுவனர் டாக்டர். கென்னடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பனை மரங்களின் சிறப்புகள் மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார். நிகழ்ச்சியின் முடிவில் மாணவர்கள் சார்பாக பனைவிதைகள் விதைக்கப்பட்டது. நாட்டு நலப்பணிதிட்ட அணி எண் 43-ன் திட்ட அலுவலர் அபுல்கலாம் ஆஸாத் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வரின் ஆலோசனையின்படி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News