உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக தேனி மாவட்டத்தில் இன்றுமுதல் ஒருவழிப்பாதை அமல்

Published On 2022-12-23 05:25 GMT   |   Update On 2022-12-23 05:25 GMT
  • சபரிமலை அய்யப்பன்கோவில் மகரஜோதிவிளக்கு தரிசனம் அடுத்தமாதம் 14-ந்தேதி நடைபெற உள்ளது.
  • கடும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஒருவழிப்பாதை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலசொக்கநாதபுரம்:

சபரிமலை அய்யப்பன்கோவில் மகரஜோதிவிளக்கு தரிசனம் அடுத்தமாதம் 14-ந்தேதி நடைபெற உள்ளது. தற்போது தேனி மாவட்டம் வழியாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்க ஒருவழிப்பாதை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தேனி மாவட்ட போலீசார் கூறியதாவது,

சபரிமலை செல்லும் பக்தர்களின் வாகனங்கள் அதிகரித்து வருகிறது. ஆண்டுேதாறும் பக்தர்களின் வசதிக்காக கம்பம்மெட்டு சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்படும். அதன்படி இன்றுமுதல் ஜனவரி 14-ந்தேதி வரை கம்பம்மெட்டு சாலை ஒருவழிப்பாதையாக இயங்கும்.

அதன்படி தேனியில் இருந்து சபரிமலை அய்யப்பன்கோவிலுக்கு செல்லும் வாகனங்கள், தேனி, சின்னமனூர், கம்பம், கம்பம்மெட்டு, கட்டப்பணை, வாகமன், ஏலப்பாறை, குட்டிக்காணம்,பூத்துக்குலு, முண்டக்கயம், எரிமேலி, பம்பை வழியாக செல்ல வேண்டும். அங்கிருந்து திரும்பும் வாகனங்கள் பம்மை, குட்டிக்காணல், பீர்மேடு, பாம்பனாறு, வண்டிபெரியாறு, குமுளி, கூடலூர், கம்பம், சின்னமனூர் வழியாக தேனி வரவேண்டும்.

இந்த போக்குவரத்து வழித்தட மாற்றத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் பக்தர்கள் வாகனங்களுக்கு வழித்தடம், தகவல்களை தெரிவிப்பதற்காக முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News