உள்ளூர் செய்திகள்

கடத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நடவடிக்கை எடுக்காததால் கவுன்சிலர்கள் வெளிநடப்பு

Published On 2022-09-24 09:40 GMT   |   Update On 2022-09-24 09:40 GMT
  • 9 மாதத்துக்கு முன் நம்பிக்கையில்லா தீர்மானம் புகாராக கொடுக்கப்பட்டது.
  • ராஜாமணி, ராணி,கண்மணி, சுகுணா, ருக்குமணி, சித்ரா, உள்ளிட்ட கவு ன்சிலர்கள்வெளிநடப்பு செய்தனர்.

பாப்பிரெட்டிப்பட்டி,

தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 13 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். பா.ம.க. 5, தி.மு.க. 3 அ.தி.மு.க.- தே.மு.தி.க. 1 மற்றும் சுயேச்சை ஒருவர் உள்பட 13 பேர் உள்ளனர். இதில் துணை தலைவராக உள்ள சத்திவேல் மீது 11 கவுன்சிலர்கள் கலெக்டரிடம் கடந்த 9 மாதத்துக்கு முன் நம்பிக்கையில்லா தீர்மானம் புகாராக கொடுக்கப்பட்டது.

அவர் அரூர் ஆர்.டி.ஒ.விடம் வழங்கியும் இதுவரை நடவடிக்கை எடுக்காத நிலையில் உள்ளது. தற்போது 2021-2022 பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் மூலம் ஒதுக்கப்பட்டவேலைகளை முறையாக ஒதுக்கவில்லை என கூறப்படுகின்றது.

இதை கண்டித்தும் பி.டி.ஒ. உள்ளிட்ட அதிகாரிகளை கண்டித்தும் முத்துகுமரன், ஜெயகுமார், சங்கர், கோபுரம் கோவிந்தசாமி, ராஜாமணி, ராணி,கண்மணி, சுகுணா, ருக்குமணி, சித்ரா, உள்ளிட்ட கவு ன்சிலர்கள்வெளிநடப்பு செய்தனர். இதனால் கடத்தூர்பி.டி.ஒ. ஆபீசில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News