உள்ளூர் செய்திகள்

திரவுபதி அம்மன் கோவிலில் மஹாபாரத சொற்பொழிவு நடந்த காட்சி.

பெரியமுக்குளம் அருகே 12 கிராம மக்கள் இணைந்து மழைவேண்டி மஹாபாரதசொற்பொழிவு

Published On 2022-06-25 08:52 GMT   |   Update On 2022-06-25 08:52 GMT
  • தருமபுரி அருகே 12 கிராம மக்கள் சேர்ந்து விழா நடத்தினர்.
  • மழை வேண்டி மஹாபாரத சொற்பொழிவு நடந்தது.

காரிமங்கலம்.

தருமபுரி மாவட்டம் முக்களம் ஊராட்சி பெரியமுக்குளம் ஓபுளிக்கு உட்பட்ட சீகலஅள்ளி கிராமத்தில் திரெளபதி அம்மன் கோவிலில் 12கிராமமக்கள் மழை வேண்டி பொதுமக்களும் நோய் நொடியின்றி வாழ மஹாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 18 நாட்களாக நடைபெற்றது.

தருமபுரி மாவட்டத்தில் மஹாபாரத சொற்பொழிவுகள் நடத்திய பின் கூத்துக்கலைஞா்கள் கொண்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றால் மழைவரும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருந்தது.

மஹாபாரத சொற்பொழிவில் 18-ம் நாள் 18-ம் போர் என்று அழைக்கப்படும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் அருள் ஜோதி நாடக சபா கூத்துக்கலைஞா்கள் துரியோதனன் வேடம் தரித்தும் ,பஞ்சபாண்டவா் வேடம் அணித்தும் நடித்துக்காட்டினா் .இந்த நிகழ்ச்சியை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பார்த்து சென்றனா்.

Similar News