உள்ளூர் செய்திகள்

நூலக கட்டுமான பணியை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆய்வு செய்த காட்சி.

தாரமங்கலம் நகராட்சியில் நவீன நூலக கட்டுமான பணியில் தரமில்லை; அ.தி.மு.க கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

Published On 2022-09-08 10:11 GMT   |   Update On 2022-09-08 10:11 GMT
  • நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்ட ரூ.1.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
  • சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி ஆணையாளர் முஸ்தபா, முதன்மை பொறியாளர் சரவணன் ஆகியோர் நூலக கட்டுமான பணி நடைபெறுவதை வந்து நேரில் பார்வையிட்டனர்.

தாரமங்கலம்:

தாரமங்கலம் நகராட்சியில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்ட ரூ.1.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. வேலை நடைபெறும் 13- வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கட்டுமான பணிகள் தரம் இல்லாமலும் போதிய அளவு ஆழம் இன்றியும் பில்லர் அமைத்தும், தேங்கிய தண்ணீரை அகற்றாமல் கலவை கொட்டி மெத்தன போக்கில் பணிகள் நடைபெறுவதாகவும் அ.தி.மு.க.கவுன்சிலர்களிடம் கூறினர்.

அதனை தொடர்ந்து அ.தி.மு.க. வார்டு கவுன்சிலர்கள் தமிழ்செல்வி, பாலசுப்ரமணியம், சின்னுசாமி மற்றும் அ.தி.மு.க. நகர அவைத்தலைவர் கோவிந்தன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு தரமில்லாத கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி ஆணையாளர் முஸ்தபா, முதன்மை பொறியாளர் சரவணன் ஆகியோர் நூலக கட்டுமான பணி நடைபெறுவதை வந்து நேரில் பார்வையிட்டனர்.

பில்லர் அமைக்க தோண்டப்பட்ட குழியில் மழைநீர் குளம்போல் தேங்கியதை உடனடியாக மோட்டார் வைத்தும், பக்கெட் மூலமாகவும் இறைத்து அப்புறப்படுத்தினர் .அவ்வப்போது பணிகளை ஆய்வு செய்து கட்டுமானம் தரமானதாக அமைத்துக்கொடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News