உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தூய்மை பணியாளர்கள்

கிராம ஊராட்சி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-06-20 09:44 GMT   |   Update On 2022-06-20 09:44 GMT
  • குறைந்தபட்ச ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • தொட்டியை சுத்தம் செய்ய மாதம் ரூ. 1000 அலவன்ஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மதுரை

மதுரை கலெக்டர் அலுவலகம் அருகில் இன்று கிராம ஊராட்சி ஓ.எச்.டி. ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை (காவலர்) பணியாளர்கள் குறைந்தபட்ச ஊதியம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உள்ளாட்சி சங்க மாநிலக்குழு நிர்வாகி நல்மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தங்கவேல்பாண்டியன், துணை தலைவர் ஆஞ்சி, பொதுச்செயலாளர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் அரவிந்தன், மாவட்ட தலைவர் கண்ணன், பொருளாளர் கவுரி, துணை செயலாளர்கள் பொன்ராஜ், காளிராஜன் மற்றும் மணவாளன், ஆண்டவர், சேதுராமு, பூமிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஊராட்சி ஊழியர்களான ஓ.எச்.டி. ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், ஓ.எச்.டி. ஆபரேட்டர்கள் ஓய்வு பெறும்போது பணிக்கொடை, ஓய்வூதியத்தை உடனே வழங்க வேண்டும், ஓ.எச்.டி. ஆபரேட்டர்களுக்கு ரூ.1,400 ஊதிய உயர்வு அரசாணையை திருத்தம் செய்து வெளியிட வேண்டும்.

7-வது ஊதியக்குழு நிலுவை ஊதியம் 55 மாதங்களாகியும் வழங்கப்படவில்லை. அதை உடனே வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான ஊதியத்தை ஓ.எச்.டி. ஆபரேட்டர்களுக்கு நிர்ணயம் செய்ய வேண்டும்.

தூய்மை காவலர்களுக்கு ரூ.3 ஆயிரத்து 600 ஊதியத்தை உயர்த்தி, ஊராட்சிகள் மூலமாக நேரடியாக சம்பளம் வழங்க வேண்டும். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொட்டியை சுத்தம் செய்ய மாதம் ரூ. 1000 அலவன்ஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

Similar News