உள்ளூர் செய்திகள்

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

Published On 2022-08-17 09:19 GMT   |   Update On 2022-08-17 09:19 GMT
  • ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
  • அகவிலை படியை முன் தேதியிட்டு வழங்க கோரி

கரூர்:

மத்திய அரசு அறிவித்தது போல் நடப்பாண்டு ஜன. 1-ந் தேதி முதல் 3 சதவீத அகவிலைப் படியை உடனே முன் தேதியிட்டு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கரூர் மாவட்ட மையம் சார்பில், மாவட்ட தலைவர் சடையாண்டி தலைமையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர் மாவட்ட மின்சாரத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ஜவஹர் சிறப்புரையாற்றினார். மாவட்ட இணை செயலாளர்கள் செல்லமுத்து, ராஜசேகரன், சங்கரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் முத்துக்கனி, ஜெயமூர்த்தி, மின்சாரத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜகோபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட செயலாளர் தங்கவேலு வரவேற்றார். மாவட்ட பொருளாளர் குப்புசமி நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில், மருத்துவ காப்பீட்டு நிதி எந்தவித அறிவிப்பும் இன்றி கூடுதலாக ரூ.147 பிடித்தம் செய்வதையும், குடும்ப நல நிதி ரூ.70 கூடுதலாக பிடித்தம் செய்வதையும் உடனே நிறுத்தவேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும். தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றிடவேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.     

Tags:    

Similar News