உள்ளூர் செய்திகள்

குலசேகரம் அருகே அரசு பள்ளியில் புதிய கட்டிடம்

Published On 2022-06-12 07:32 GMT   |   Update On 2022-06-12 07:32 GMT
  • அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்
  • ரூ.17.32 லட்சம் மதிப்பில் புனரமைப்பு

கன்னியாகுமரி:

திருநந்திக்கரை அரசு தொடக்கப் பள்ளியில் தமிழக அரசின் பள்ளிகள் புனரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.17.32 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.


இந்தக் கட்டிடத் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் மேரி மல்லிகா தலைமை தாங்கினார். அமைச்சர் மனோ தங்கராஜ் வகுப்பறை கட்டிடங்களைத் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், திருவட்டார் கல்வி மாவட்ட அலுவலர் ராமசுப்பு, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) யசோதா, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் அமுதா, திற்பரப்பு பேரூராட்சி துணைத் தலைவர் ஸ்டாலின்தாஸ், திருவட்டார் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜாண்சன், குலசேகரம் பேரூராட்சி துணைத்தலைவர் ஜோஸ் எட்வர்ட், குமரி மேற்கு மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அலாவுதீன், குமரி மேற்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் ஜெஸ்டின் பால்ராஜ், குமரி மேற்கு மாவட்ட திமுக வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் ஜேஎம்ஆர் ராஜா, குமரி மேற்கு மாவட்ட திமுக தொண்டரணி துணை அமைப்பாளர் சுருளோடு சுரேஷ் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News