உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

போடியில் துணிகரம் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

Update: 2022-06-29 04:03 GMT
  • போடியில் வீட்டின் பூட்டை உடைத்து 12½ பவுன் தங்கநகை மற்றும் ரூ.1.75 லட்சம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
  • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி விசுவாசபுரம் கண்ணன் கோவில் மேற்குதெருவை சேர்ந்தவர் கணேசன்(48). இவர் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் குலதெய்வகோவிலுக்கு சாமி கும்பிட சென்றுவிட்டார்.

இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து பெட்ரூமுக்கு சென்று அங்கிருந்த பீரோவையும் உடைத்து அதிலிருந்த 12½ பவுன் தங்கநகை மற்றும் ரூ.1.75 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

கோவிலுக்கு சென்று திரும்பிய கணேசன் வீடு திறந்துகிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News