உள்ளூர் செய்திகள்

ஜமாபந்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற கலெக்டர் விஷ்ணு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த காட்சி.

நெல்லை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் திரண்ட பொதுமக்கள்- கலெக்டர் மனுக்கள் பெற்றார்

Published On 2022-06-07 09:47 GMT   |   Update On 2022-06-07 09:47 GMT
  • ஜமாபந்தி நிகழ்ச்சி வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது.
  • கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்து தங்களது நீண்டநாள் கோரிக்கை மனுக்களை கொடுத்து வருகிறார்கள்.

நெல்லை தாலுகா அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பட்டா மாறுதல், பயிர்க்கடன் பெறுதல், பல்வேறு சான்றிதழ்கள் பெறுதல் உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டது.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனு கொடுத்தனர். அப்போது முதியோர் உதவித்தொகைக்கான ஆணையை 7 பேருக்கு கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.

மேலும் ஓய்வூதிய ஆணைகளையும் வழங்கினார். இன்றைய நிழ்ச்சியில் மதவக்குறிச்சி, நாரணம்மாள்புரம் குறுவட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் மனு பெறப்பட்டது.

நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் (சர்வே) வாசுதேவன், தேர்தல் தாசில்தார் கந்தப்பன், கலெக்டர் அலுவலக மேலாளர் வெங்கடாச்சலம், நெல்லை தாசில்தார் சண்முக சுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News