உள்ளூர் செய்திகள்

பஸ்சில் பொருத்தப்பட்டிருருந்த ஏர்ஹாரன் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் அகற்றப்பட்டது.

தஞ்சையில், பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்கள் பறிமுதல்

Published On 2023-04-12 11:22 GMT   |   Update On 2023-04-12 11:22 GMT
  • அனைத்து பஸ்களையும் வழிமறித்து நிறுத்தி ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளதா என சோதனை செய்தனர்.
  • சம்பந்தப்பட்ட பஸ்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

தஞ்சாவூர்:

தஞ்சை நகரில் சில பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டு இயக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தன. இந்த ஏர் ஹாரன்களால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

மேலும் மாணவர்கள், முதியவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தஞ்சை மாதாக்கோட்டை சாலை குழந்தை இயேசு கோவில் அருகில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவின் பேரில் நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அந்த வழியாக வந்த அனைத்து பஸ்களையும் வழிமறித்து நிறுத்தி அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளதா என சோதனை செய்தனர்.

இதில் கண்டறியப்பட்ட பஸ்களில் இருந்த ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டன.

தொடர்ந்து அகற்றப்பட்ட ஏர் ஹாரன்களை அந்தந்த பஸ்களின் டயர்களுக்கு அடியில் வைத்து நொறுக்கப்பட்டன.

அப்போது டிரைவர், கண்டக்டர்களிடம்

ஏர்ஹாரன்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் எடுத்துக் கூறினார்.

மேலும் முதன்முறை என்பதால் எச்சரிக்கை விடுக்கிறேன்.

நாளையில் இருந்து ஏர்ஹாரன் உள்ள பஸ்களில் பறிமுதல் செய்வதோடு சம்பந்தப்பட்ட பஸ்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இதேபோல் தஞ்சை நகரில் பல இடங்களில் போக்குவரத்து போலீசார் சோதனை நடத்தி கண்டறியப்பட்ட பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்து எச்சரித்தனர்.

Tags:    

Similar News