உள்ளூர் செய்திகள்

கும்பகோணத்தில், தாய்ப்பால் வாரவிழா விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2023-08-11 09:53 GMT   |   Update On 2023-08-11 09:53 GMT
  • 500-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், பயிற்சி மாணவிகள் கலந்து கொண்டனர்.
  • அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக பேரணியான சென்றனர்.

கும்பகோணம்:

கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரி சார்பில் தாய்ப்பால் வாரவிழா கொண்டாடப்பட்டது.

விழாவில் கருத்தரங்கம், ஆரோக்கியமான குழந்தை களுக்கான போட்டிகள், தாய்ப்பால் குறித்து தாய்மார்களுக்கு விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவின் நிறைவு நாளை யொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு ஊரக மற்றும் சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் திலகம் தலைமை தாங்கினார். கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் கமருல் ஐமான், ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் டாக்டர்கள் பிருந்தா, ரேணுகா, சாய் கண்ணன், மகேஸ்வரன், ஜானகி, செவிலிய கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை செவிலியர்கள், செயின்ட் சேவியர், மன்னை நாராயணசாமி மற்றும் கோநகர் நாடு ஆகிய செவிலியர் கல்லூரிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஊர்வலமானது கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆஸ்பத்திரியில் வந்து முடிவடைந்தது.

Tags:    

Similar News