உள்ளூர் செய்திகள்

விளையாட்டு வீராங்கனைகளை கைக்குலுக்கி கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உற்சாகப்படுத்தினார்.

மேஜர் தயான்சந்த் பிறந்தநாளை முன்னிட்டு ஹாக்கி போட்டி- கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2022-08-29 10:25 GMT   |   Update On 2022-08-29 10:25 GMT
  • மாணவ -மாணவிகளுக்கு தனித்தனியாக ஹாக்கி விளையாட்டு போட்டி நடைபெற்றது.
  • போட்டியில் முதலிடம், இரண்டாமிடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

தஞ்சாவூர்:

இந்திய ஹாக்கி விளையாட்டு வீரர் மேஜர் தயான்சந்த் பிறந்தநாள் தேசிய விளையாட்டு தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று அவரது 117-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது.‌

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ் வரவேற்றார். மாவட்ட ஹாக்கி பயிற்றுனர் அன்பழகன் மேஜர் தயான்சந்த் சாதனைகளை விரிவாக எடுத்துரைத்தார்.

விழாவில் மாணவ -மாணவிகளுக்கு தனி தனியாக ஹாக்கி விளையாட்டு போட்டி நடைபெற்றது.

இதனை கலெக்டர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்து விளை யாட்டு போட்டியை பார்த்தார்.

முடிவில் வெற்றிபெற்ற முதல், இரண்டாம் இடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்க ப்பட்டது.

இந்நிகழ்ச்சி யில்தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் , மாவட்ட ஹாக்கி செயலர் ராஜ்குமார் , செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் தர்மலிங்கம், தூய அந்தோணியார் மேல் நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஹெர்பர்ட் ஜோன்ஸ், மாவட்ட வாலிபால் பயிற்றுநர் மகேஷ்குமார், நீச்சல் பயிற்றுநர் ரஞ்சித்கு மார், அவர்கள், மாணவ -மாணவியகள், ஹாக்கி விளையாட்டு வீரர்- வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News