உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு மல்லிகை கிலோ ரூ.2000-க்கு விற்பனை

Published On 2022-10-23 06:56 GMT   |   Update On 2022-10-23 06:56 GMT
  • தஞ்சை பூக்கார தெருவில் பூச்சந்தை அமைந்துள்ள ஏராளமான கடைகள் உள்ளன.
  • நேற்று மல்லிகைப்பூ கிலோ ரூ.1000-க்கு விற்கப்பட்டது. இன்று இரண்டு மடங்காக விலை உயர்ந்து கிலோ ரூ.2000-க்கு விற்பனையாகியது.

தஞ்சாவூர்:

தஞ்சை பூக்கார தெருவில் பூச்சந்தை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான கடைகள் உள்ளன.

திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து தினமும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

இதே போல் இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கும் பூக்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும்.

பண்டிகை காலங்கள், சுபமுகூர்த்த நாட்களில் பூக்களின் விலை கணிசமாக அதிகரிக்கும்.

இதேபோல் வரத்து குறைவாக இருந்தாலும் விலை அதிகரிக்கும்.

இந்த நிலையில் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தீபாவளிக்கு பூக்களின் தேவை அதிகம் என்பதால் அதன் விலையும் கிடுகிடுவென அதிகரித்து உள்ளது.

அதன்படி நேற்று மல்லிகைப்பூ கிலோ ரூ.1000-க்கு விற்கப்பட்டது.

இன்று இரண்டு மடங்காக விலை உயர்ந்து கிலோ ரூ.2000-க்கு விற்பனையாகியது.

இதேப்போல் முல்லைப் பூ விலையும் இரண்டு மடங்கு உயர்ந்து கிலோ ரூ.2000-க்கு விற்கப்பட்டது.

இதேபோல் கனகாம்பரம் ரூ.1500, செவ்வந்தி ரூ.200, அரளி ரூ.300, ஆப்பிள் ரோஸ் ரூ.200-க்கும் விற்பனையாகின.

இது குறித்து பூ வியாபாரி சந்திரசேகரன் கூறும்போது:-

தீபாவளி பண்டிகை என்பதால் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. பொதுமக்களும் ஆர்வத்துடன் பூக்கள் வாங்கி செல்கின்றனர் என்றார்.

Tags:    

Similar News