உள்ளூர் செய்திகள்

விவசாயி குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் கீதாஜீவன் வழங்கிய காட்சி. அருகில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கலெக்டர் செந்தில்ராஜ் உள்ளனர்.

விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கி பலியான விவசாயி குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதிஉதவி - அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

Published On 2023-05-14 08:56 GMT   |   Update On 2023-05-14 08:56 GMT
  • சோலை ராஜ் கடந்த 9-ந் தேதி காட்டு பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கும் போது மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
  • இச்சம்பவம் அறிந்து அமைச்சர் கீதாஜீவன் முதல்-அமைச்சர் பேரிடர் நிவாரண நிதி ரூ. 4 லட்சத்திற்கான காசோலையை வழங்கி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் அருகே உள்ள பெருமாள் கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் சோலை ராஜ். ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர் கடந்த 9-ந் தேதி காட்டு பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கும் போது மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் அறிந்து அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உள்ளி ட்டோர் முதல்-அமைச்சர் பேரிடர் நிவாரண நிதி ரூ. 4 லட்சத்தி ற்கான காசோ லையை வழங்கி பாதிக்க ப்பட்ட குடும்பத்தி ற்கு ஆறுதல் தெரிவித்தனர்.விளாத்திகுளம் தாசில்தார் சசிகுமார், புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், புதூர் ஒன்றிய செய லாளர்கள் செல்வ ராஜ், ராதாகிருஷ்ணன், மும்மூர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News