உள்ளூர் செய்திகள்

மாரிமுத்து எம்.எல்.ஏ.

உர தட்டுப்பாட்டை போக்க வேண்டும்- எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Published On 2022-08-04 09:25 GMT   |   Update On 2022-08-04 09:25 GMT
  • மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
  • ரூ.260 மதிப்புள்ள யூரியாவை வாங்க ரூ.700 மதிப்புள்ள நுண்ணுயிர்கள் மற்றும் இடுபொருட்களை வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப் படுகின்றனர்.

திருத்துறைப்பூண்டி:

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, திருத்துறைப்பூண்டி தொகுதி எம்.எல்.ஏ. மாரிமுத்து அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமான சாகுபடி பரப்பை விட அதிக அளவில் சாகுபடி நடந்து வருகிறது. ஆனால் யூரியா, டி.ஏ.பி. போன்ற உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ரூ.260 மதிப்புள்ள யூரியாவை வாங்க ரூ.700 மதிப்புள்ள நுண்ணுயிர்கள் மற்றும் இடுபொருட்களை வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப் படுகின்றனர். இதனால் விவசாயிகளிடையே சாகுபடியில் ஒரு சுணக்கமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது நமது நாட்டில் உர உற்பத்தி குறைவு காரணமாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் போதிய அளவு உரம் கிடைப்பதில் ஒரு நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை எடுத்து உர தட்டுப்பாட்டை போக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News