உள்ளூர் செய்திகள்

தலைக்கவசத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

கொடைக்கானலில் யானைகள் அட்டகாசத்தை தடுக்க கோரி தலைக்கவசத்துடன் தர்ணா

Published On 2022-07-30 05:15 GMT   |   Update On 2022-07-30 05:15 GMT
  • கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலக த்தில் கோட்டாட்சியர் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
  • யானைகளால் மிதிக்கப்பட்ட தலைக் கவசத்தை வைத்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலக த்தில் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அரசு அதிகாரி கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து எடுத்துரைக்க ப்பட்டது. பிரதானமாக கொடைக்கானல் கீழ் மழை பகுதிகளாக இருக்கக்கூடிய பாரதி அண்ணா நகர், பேத்துப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தினமும் யானை அட்டகாசம் செய்து வருகிறது.

அவர்கள் விளை விக்க கூடிய மலைக்காய்கறி களை நாசம் செய்தும் வருகிறது. யானையை விரட்ட பல்வேறு கோரிக்கை கள் மற்றும் போராட்டங்கள் செய்தும் இதுவரை வனத்துறை எந்த ஒரு நட வடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு யானைகளால் மிதிக்கப்பட்ட தலைக் கவசத்தை வைத்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது மட்டு மல்லாது மலை விவசாயி களுக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News