உள்ளூர் செய்திகள்

அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை வேதனையுடன் காண்பிக்கும் விவசாயிகள்.

கனமழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தன

Published On 2023-05-28 09:46 GMT   |   Update On 2023-05-28 09:46 GMT
  • நெற்பயிர்கள் வயலிலேயே சாய்ந்து மழைநீரில் மூழ்கி அழுகி வருகிறது.
  • பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, ராராமுத்திரகோட்டை ஊராட்சி வருவாய்கிரா மத்திற்கு உட்பட்ட கள்ளிமேடு, மற்றும் ராராமுத்திர கோட்டை பகுதியில் சூறை காற்றுடன் கனமழை பெய்தது.

இதனால் கோடையில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பல நூறு ஏக்கர் நெற்பயிர்கள் வயலிலிலேயே சாய்ந்து மழைநீரில் மூழ்கிய நிலையில் அழுகி சேதமடைந்து வருகிறது.

இந்த நெற்பயிர்கள் இன்னும் சில வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் அழுகி சேதமடைந்து வருவது விவசாயிகளுக்கு மிகுந்த வேதனையை அளித்து வருகிறது.

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயி ர்களை ராராமுத்திரகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சோழன், கிராம நிர்வாக அதிகாரி சதீஷ்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

அப்போது விவசாயிகள் மழையால் சூறை காற்றால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு அரசு உரிய நிவாரனம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News