உள்ளூர் செய்திகள்

மண்டபம் கட்டும் இடத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.


குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் 14-ந்தேதி மகா மண்டபம் கட்டும் பணி-அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்கிறார்

Published On 2022-06-06 09:38 GMT   |   Update On 2022-06-06 09:38 GMT
  • குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் வருகிற 14-ந்தேதி மகா மண்டபம் கட்டும் பணி தொடங்குகிறது.
  • இதனை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்கிறார்.

உடன்குடி:

திருச்செந்தூர் வட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற கோவிலில் ஒன்றாகும். இங்கு நடைபெறும் தசரா திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் திருவிழாவாகும். இக்கோவிலில் பக்தர்கள்சாமிதரிசனம் செய்வதற்காக முன் முகப்புமண்டபம் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தண்டுபத்து சண்முக நாடார்- பிச்சைமணி அம்மாள் அறக்கட்டளை சார்பில் இவர்களது மகன் ராமசாமி என்பவர் நன்கொடையாக மண்டபம் கட்டி கொடுக்கமுடிவு செய்துள்ளார். இதை யொட்டி மண்டபம் கட்டுவதற்கான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு, அரசு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இந்துசமய அறநிலையத்துறையை சேர்ந்த இணை ஆணையர் அன்புமணி, நகைசரிபார்க்கும் துணை ஆணையர் வெங்கடேஷ், ஆய்வாளர் பகவதி மற்றும் அறநிலையத் துறை அலுவலர்கள் ஆகியோர் மண்டபம் உருவாகும் இடங்களை சுற்றிப்பார்த்து ஆய்வு செய்தனர். பின்பு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளகளிடம் கூறியதாவது:-

மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான முன் மண்டபம் கட்டும் பணியை மண்டபத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவர் அவரது பெற்றோர்களின் அறக்கட்டளை சார்பில் கட்டிகொடுக்க முடிவு செய்துள்ளார். அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த மண்டபம் கட்டும் தொடக்க விழா வருகிற 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இக்கோவிலில் வைத்து நடைபெறுகிறது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நட்டி, முன்மண்டபம் கட்டும் பணியை தொடங்கி வைக்கிறார்.

வருகிற தசரா திருவிழாவிற்கு முன்பு இந்த மண்டபத்தை கட்டிவிடலாம் என்ற நம்பிக்கை உள்ளது. மண்டபம் கட்டுவதற்கு பக்தர்களும் பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சுவாமி தரிசனம் செய்த அமைச்சரை கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியம், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் தாண்டவன் காடு கண்ணன் ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து கோவில் சார்பில்பூரணகும்ப மரியாதையுடன் அமைச்சரை வரவேற்றனர். அவருடன் ஏராளமான தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக வந்திருந்தனர்.

Tags:    

Similar News