உள்ளூர் செய்திகள்

உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி தொடக்க விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசிய காட்சி. அருகில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உள்ளனர். 

விளாத்திகுளம் அருகே ரூ.6.27 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி - அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

Published On 2023-10-19 08:34 GMT   |   Update On 2023-10-19 08:34 GMT
  • ரூ.6.27 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
  • அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டே யன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்துகொண்டு பாலம் அமைக்கும் பணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் அருகே வைப்பாற்றின் குறுக்கே உருளைகுடி ஊராட்சி பீக்கிலி பட்டி கிராமம் முதல் சங்கராபுரம் கிராமம் வரை தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டத்தை இணைக்கும் வகையில் நெல்லை நபார்டு நெடுஞ்சாலை கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் ரூ.6.27 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மார்க்கண்டே யன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாலம் அமைக்கும் பணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலா ளர்கள் முருகேசன், ராதா கிருஷ்ணன், நவநீத கண்ணன், சின்ன மாரி முத்து, ராம சுப்பு, விளாத்தி குளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கி ணைப்பாளர் ஸ்ரீதர், சாத்தூர் ஒன்றிய பிரதிநிதிகள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News