உள்ளூர் செய்திகள்

ஒடசல்பட்டியில் சாலையோரம் அகற்றப்படாமல் உள்ள மரக்கட்டைகள் -விபத்து ஏற்படும் அபாயம்

Published On 2022-10-07 09:23 GMT   |   Update On 2022-10-07 09:23 GMT
  • மரங்களை வெட்டி அகற்ற கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏலம் விடப்பட்டது.
  • மரம் வெட்டியவர்களை இதை அகற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க எதிர்பார்த்து காத்துள்ளனர்.

கடத்தூர்,

தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியம் பகுதி ஒடசல்பட்டியில் இருந்து அரூர் வரை செல்லும் தார் ரோடு விரிவாக்க பணிக்காக அப்பகுதியில் உள்ள புளிய மரங்கள் உள்பட பல்வேறு மரங்களை வெட்டி அகற்ற கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏலம் விடப்பட்டது.

இந்த நிலையில் ஏலம் எடுத்தவர்கள் மரங்களை வெட்டி எடுத்துச் சென்ற நிலையில் மரத்தின் அடிப்பாகம் மற்றும் வேரை ரோடு ஓரங்களிலேயே விட்டுச் சென்றுள்ளனர். இதனால் இரவு மற்றும் பகல் நேரங்களில் அந்த வழியாக சென்று வரும் வாகனங்கள் விபத்தை சந்திக்கும் சூழ்நிலையில் இருந்து வருகிறது. இதுகுறித்து பல்வேறு முறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் அலட்சியம் காட்டி வருவதாக கூறப்படுகின்றது. இந்த மரக்கட்டைகளால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் தொடரும் வரை அகற்றப்படாமல் இருந்து வருமா என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பிஉள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் மரம் வெட்டியவர்களை இதை அகற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க எதிர்பார்த்து காத்துள்ளனர். விபத்துக்கு முன் நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?

Tags:    

Similar News