உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற போது எடுத்த படம்.

விளாத்திகுளம் அருகே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Published On 2022-08-25 09:12 GMT   |   Update On 2022-08-25 09:12 GMT
  • விளாத்திகுளம் தாலுகா குளத்தூர் டி.எம்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிவப்பு நாடா குழு சார்பாக உலக போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
  • கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்ட இந்த விழிப்புணர்வு பேரணியில் போதைப்பொருட்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மாணவர்கள் போதைப் பொருள் எதிர்ப்பு கோஷமிட்டு சென்றனர்.

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் தாலுகா குளத்தூர் டி.எம்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிவப்பு நாடா குழு சார்பாக உலக போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.கல்லூரியின் இயக்குநர் கோபால் முன்னிலை வகித்தார். குளத்தூர் போலீஸ் இன்ஸ்ெபக்டர் விஜயலட்சுமி பேரணியை தொடங்கி வைத்தார்.

கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்ட இந்த விழிப்புணர்வு பேரணியில் போதைப்பொருட்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மாணவர்கள் போதைப் பொருள் எதிர்ப்பு கோஷமிட்டு சென்றனர். கல்லூரியின் மக்கள் தொடர்பு அதிகாரி கெங்குமணி மேற்பாா்வையில் மாணவர்களும் பேராசிரியர்களும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். விழிப்புணர்வு பேரணியானது குளத்தூர் காவல் நிலையம் முன்பு தொடங்கி பேருந்து நிலையம் வரையில் சென்று முடிவடைந்தது.

பேரணிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் முதல்வர் முனைவர் அன்பழகன், சிவப்பு நாடா குழுவின் ஒருங்கிணைப்பாளர் முனியசாமி ஆகியோா் செய்திருந்தார்கள்.

Tags:    

Similar News