உள்ளூர் செய்திகள்

தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டி தாமோதரன் தொடங்கி வைத்தார்.

எய்ட்ஸ் குறித்துஆட்டோ மூலம் விழிப்புணர்வு

Published On 2023-03-20 09:40 GMT   |   Update On 2023-03-20 09:40 GMT
  • ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டுதல் நிகழ்ச்சியானது தருமபுரி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் தாமோதரன் தொடங்கி வைத்தார்
  • இந்த நிகழ்வில் 27 ஆட்டோக்களில் விழிப்புணர்வு வாசகம் ஒட்டப்பட்டது.

தொப்பூர்,

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் வழிகாட்டு தலின்படி, தருமபுரி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அளவு அலுவலகத்தின் சார்பாக மாவட்ட அளவில் எச்ஐவி, எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஆனது ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டுதல் நிகழ்ச்சியானது தருமபுரி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் தாமோதரன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட மேலாளர் மருத்துவர் பிருந்தா, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அளவு வாகன ஆய்வாளர்கள், வட்டார போக்குவரத்து அலுவலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அளவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் 27 ஆட்டோக்களில் விழிப்புணர்வு வாசகம் ஒட்டப்பட்டது. ஆட்டோ ஓட்டுனர் சங்கம் மூலம் எச்ஐவி, எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், எச்ஐவி குறித்து சந்தேகங்களுக்கு இலவச தொலைபேசி எண் 1800-419-1800 மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அளவு அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.

முடிவில் மாவட்ட மேற்பார்வையாளர் உலகநாதன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News