உள்ளூர் செய்திகள்
கழிவறை இல்லாத வீடுகளை படத்தில் காணலாம்.

பென்னாகரம் அருகே இலவச வீடு, தனிநபர் கழிப்பறை திட்டங்கள் கிடைக்காமல் தவிக்கும் கிராம மக்கள்

Published On 2022-06-01 09:23 GMT   |   Update On 2022-06-01 09:23 GMT
பென்னாகரம் அருகே இலவச வீடு, தனிநபர் கழிப்பறை திட்டங்கள் கிடைக்காமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.
தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏமனூர் கிராமம்  மலைகளால் சூழப்பட்ட பகுதி  காவிரி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் தேக்கத்தில் இப்பகுதியும் ஒன்றாகும். இப்பகுதி மக்களின் வருமானம் ஈட்டக்கூடிய தொழிலாக விவசாயம் மற்றும் காவிரி ஆற்றில் மீன் பிடித்தல், ஆடு மாடு மேய்த்தல் உள்ளிட்டவை இவர்களின் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. 

இப்பகுதி முழுவதும் மூன்று பக்கங்களில் மலைகளாலும் ஒரு பக்கம் காவிரி ஆற்றாலும் சூழப்பட்டுள்ளது.  பல ஆண்டுகளாக சாலை அமைக்க படாததால் மண் சாலை ஆகவே இருந்தது அதனை அடுத்து தார் சாலை அமைக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெண்ணாகரம் பகுதியிலிருந்து ஏமனூருக்கு அரசு பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆயினும் நாகமரை ஊராட்சியில் அடங்கியுள்ள ஏமனூர், மேற்கு ஏமனூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்களுக்கு இதுநாள் வரை மத்திய அரசு அறிவித்துள்ள பிரதம மந்திரியின் இலவச வீடு திட்டம் மற்றும் ஒவ்வொரு வீட்டிற்கும் தனிநபர் கழிப்பறை உள்ளிட்ட திட்டங்கள் எதுவும் அப்பகுதிக்கு இதுநாள் வரை வந்து சேரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும்  குளியலறை போன்றவற்றை தற்போதுவரை  தென்னை ஓலைகள் மற்றும் துணிகளை வைத்து மறைத்து கட்டி அங்கு இருப்பவர்கள் குளியலறையாக  பயன்ப டுத்தி வருகின்றனர். 

பலமுறை இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் இதுகுறித்து மனுக்கள் கொடுத்தும் இதுநாள் வரை தங்கள் பகுதி கிராம மக்களுக்கு அது போன்ற மத்திய அரசின் திட்டங்கள் எதுவுமே கிடைக்கவில்லை என்று வேதனையுடனும் ஏக்கத்துடனும் தெரி விக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் அப்பகுதியில் உள்ள துணை சுகாதார நிலையம் எப்பொழுதும் பூட்டியை கிடைப்பதாகவும் அவசர தேவைகள் மற்றும் பிரசவம் உள்ளிட்ட சமயங்களில் மருத்துவர்கள் இல்லாததால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாகவும் தெரிவிக்கின்றனர். அங்கு உள்ள நியாய விலைக் கடைகளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மிகவும் தரமற்றதாகவும் வழங்கப்பட்டு வருவதாக வும் குற்றம் சாட்டுகின்றனர். தாங்கள் அடர்ந்த மலைப் பகுதியை தாண்டி  கிராமப் பகுதியில் இருப்ப தால் தங்களுக்கான உரிமைகள் சலுகைகள் அத்தியாவசியப் திட்டங்கள் முதல் அனைத்துமே கிடைப்ப தில்லை என்று வேதனையாக தெரிவி க்கின்றனர்.

இனியாவது எங்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்களை முழுமையாக எங்கள் கிராம பகுதி மக்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
Tags:    

Similar News