உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கோவையில் திருமணமான 5 மாதத்தில் கணவர் மீது இளம்பெண் புகார்

Published On 2022-05-26 09:59 GMT   |   Update On 2022-05-26 09:59 GMT
கள்ளத்தொடர்பை தட்டி கேட்டதால் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் தெரிவித்துள்ளார்.
கோவை:

கோவை பீளமேடு அருகே உள்ள கோல்டு வின்சை ேசர்ந்த 24 வயது இளம்பெண். 

இவர் கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-எனக்கு கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. எனது கணவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். நான் எனது கணவர் குடும்பத்துடன் வசித்து வந்தேன். எனது கணவர் அடிக்கடி யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். இது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

 நான் அவருக்கு தெரியாமல்  ஆய்வு செய்த போது எனது கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து குழந்தையுடன் வசித்து வரும் இளம்பெண் ஒருவருடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. தற்போது திருமணம் முடிந்த பின்னரும் அந்த பெண்ணுடனான ெதாடர்பை விடவில்லை. தொடர்ந்து அவர் அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று வருகிறார்.

இது குறித்து நான் கேட்ட போது எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. எனது கணவர் மற்றும் அவரது தந்தை, தாய் ஆகியோர் என்னை கொடுமைப்படுத்தி வருகின்றனர். மேலும் இதனை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
 
புகாரின் பேரில் கிழக்கு அனைத்து மகளிர் போலீசார்  இளம்பெண்ணின் கணவர், அவரது தாய், தந்தை ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

Tags:    

Similar News