உள்ளூர் செய்திகள்
ராமலிங்க அடிகளார் தெருவில் புல் செடிகளை ஊழியர்கள் நவீன எந்திரம் மூலம் வெட்டி சுத்தம் செய்த காட்சி.

நெல்லை மாநகர பகுதியில் பூங்கா-குடிநீர் தொட்டி பகுதிகளில் முட்செடிகள் அகற்றம்

Published On 2022-05-24 10:16 GMT   |   Update On 2022-05-24 10:16 GMT
நெல்லை மாநகர பகுதியில் உள்ள பூங்கா மற்றும் குடிநீர் தொட்டி பகுதியில் அமைந்துள்ள முட்செடிகள் அகற்றப்பட்டது.
நெல்லை:

நெல்லை மாநகர பகுதியில் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் குடும்பத்துடன் பொழுது போக்குவதற்காக ஏராள–மான பூங்காக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இந்த பூங்காக்களை முறையாக பராமரிக்காத காரணத்தினால் புல் மற்றும் முட்செடிகள் அவற்றில் வளர்வதாகவும், அதனை சுத்தப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் வார்டு கவுன்சிலர்களிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

 அதன் அடிப்படையில்  பூங்காக்கள், குடிநீர் தொட்டிகள் உள்ளிட்ட இடங்களை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள செடிகளை வெட்டி சுத்தப்படுத்த மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து மாநகர நல‌அலுவலர் ராஜேந்திரன் மற்றும் உதவி கமிஷனர் லெனின் அறிவுறுத்தலின் படி தச்சை மண்டல சுகாதார அலுவலர் (பொறுப்பு) இளங்கோ தலைமையில் இன்று காலை வார்டு எண் 11 -ல் ராமலிங்க அடிகளார் தெரு பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி  வளாகத்தில்  உள்பகுதியில் வளர்ந்து இருக்கும் தேவையற்ற புல், செடிகள், தாவரங்கள் மற்றும் மர கழிவுகள், இலை தழைகள்  ஆகியவை நவீன எந்திரம் மூலம் வெட்டி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

 மாநகராட்சி  மூலம் இப்பணியினை தினமும் சுமார் 10 பணியாளர்கள்  காலை மற்றும் மாலை வேளைகளில்  செய்தனர். ஆனால் நவீன புல் கட்டர் எந்திரம் மூலம் ஒரு மணி நேரத்தில் அவை சுத்தப் படுத்தப்பட்டுள்ளது.

இதே போல் மாநகர பகுதியில் உள்ள அனைத்து பூங்காக்கள் மற்றும் குடிநீர் தொட்டி உள்ள பகுதிகளிலும் மாநகராட்சி சார்பில் தேவையற்ற புல் செடிகள் மற்றும் மரங்கள் கழிவுகளை அகற்றும் பணி மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News