உள்ளூர் செய்திகள்
போக்குவரத்து பாதிப்பு

குன்னூர் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து பாதிப்பு

Published On 2022-05-24 09:49 GMT   |   Update On 2022-05-24 09:49 GMT
உள்ளூர் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்
ஊட்டி, 
நீலகிரி மாவட்டத்தில்   கடந்த ஏப்ரல்  16-ந்தேதி முதல் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. 

வாகனங்கள் குன்னூரில் இருந்து கோத்தகிரி வழியாக அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் ஊட்டில் தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. மலர் கண்காட்சி நடந்து வருவதால் மேலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை  கூடிகொண்டே வருகிறது.  
ஊட்டி வந்த சுற்றுலா பயணிகள்  திரும்பி செல்வதால்    குன்னூரின் முக்கிய சாலைகளான குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலை, குன்னூர்- ஊட்டி சாலை, குன்னூர் பஸ் நிலையம், மவுண்ட் பிளசன்ட் சாலை, மவுண்ட் ரோடு  ஆகிய சாலைகள்  முற்றிலும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் உள்ளூர் மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. 
ஆம்புலன்ஸ் செல்வதற்குக் கூட வழி இல்லாமல் அவதிப்பட்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. 
போலீசார் வாகனங்களை சீர்படுத்தினாலும் பல மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.   இதனால் போக்குவரத்தை சரி செய்ய  ஏதாவது மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News