உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

மே 28 வரை ரத்து செய்யப்பட்ட பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் மங்களூர்-ஷொர்ணூர் இடையே மட்டும் இயக்கப்படும்

Published On 2022-05-23 08:00 GMT   |   Update On 2022-05-23 08:00 GMT
ஏற்றமானூர்-கோட்டயம்-சிங்கவனம் பிரிவில் இரட்டை ரெயில் பாதை பணி காரணமாக ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஷொர்ணூர் சந்திப்பு-மங்களூர் சென்ட்ரல் இடையே (ரெயில் எண்.16650) பரசுராம் எக்ஸ்பிரஸ் மே 22 முதல் 28 வரை ஷொர்ணூர் சந்திப்பில் இருந்து வழக்கமான நேரத்தில் பிற்பகல் 2.05 மணிக்கு புறப்பட்டு மங்களூரை இரவு 9.10 மணிக்கு சென்றடையும்.
நாகர்கோவில்:

தெற்கு ரெயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ஏற்றமானூர்-கோட்டயம்-சிங்கவனம் பிரிவில் இரட்டை ரெயில் பாதை பணி காரணமாக ரெயில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ள தால் பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் மங்களூர்-ஷொர்ணூர் இடையே மட்டும் இயக்கப் படுகிறது.

மங்களூர் சென்ட்ரல்- ஷொர்ணூர் சந்திப்பு (ரெயில் எண்.16649) பரசுராம் எக்ஸ்பிரஸ் மங்க ளூர் சென்ட்ரலில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்படுவது மே 22 முதல் 28-ந் தேதி வரை ஜொர்ணூர் சந்திப்புடன் நிறுத்தப்படும். 

காலை 11.10 மணிக்கு ஷொர்ணூர் வந்து சேரும் ரெயில் அங்கிருந்து நாகர் கோவில் சந்திப்பு வரை இயக்கப்படாது. ஷொர்ணூர் சந்திப்பு-மங்களூர் சென்ட்ரல் இடையே (ரெயில் எண்.16650) பரசுராம் எக்ஸ்பிரஸ் மே 22 முதல் 28 வரை ஷொர்ணூர் சந்திப்பில் இருந்து வழக்கமான நேரத்தில் பிற்பகல் 2.05 மணிக்கு புறப்பட்டு மங்களூரை இரவு 9.10 மணிக்கு சென்றடையும். 

இந்த ரெயில் நாகர்கோவில் சந்திப்பு முதல் ஷொர்ணூர் சந்திப்பு வரை இயக்கப்படாது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News