உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

உடன்குடி அருகே முத்தாரம்மன் கோவில் கொடை விழா

Published On 2022-05-21 10:56 GMT   |   Update On 2022-05-21 10:56 GMT
உடன்குடி அருகே வடக்கு பரமன்குறிச்சி முத்தாரம்மன் கோவில் கொடை விழாவையொட்டி நாராயண சுவாமி கோவிலில் குரு பூஜை நடந்தது.
உடன்குடி:

உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட வடக்கு பரமன்குறிச்சி முத்தாரம்மன் கோவில் கொடை விழாவையொட்டிகடந்த 15-ந் தேதி மாலை 6 மணிக்கு ஸ்ரீ நாராயண சுவாமி கோவிலில் குரு பூஜை நடந்தது. 

தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. 16-ந் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது. வருஷாபிஷேகம் பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை, மதியம் அன்னதானம், இரவு 108 திருவிளக்கு பூஜையும் நடந்தது.

இரவு வடக்கத்தியான் கோவிலில் கொடிய ழைப்பு பூஜை, வில்லிசை நடைபெற்றது. 17-ந் தேதி 108 பால்குட ஊர்வலம், தொடர்ந்து தீர்த்தவாரி மற்றும் நள்ளிரவு நேரங்களில் சிறப்பு அலங்கார தீபாராதனையும் குடும்பம் திருவீதி உலா, நள்ளிரவு ஊர்வலம் நடந்தது.

18-ந் தேதி கும்மிப்பாடல், சிறப்பு பூஜை சுவாமிகள் மஞ்சள் நீராடுதல்,  நடுஇரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. 19-ந் தேதி கொடை விழா நிறைவு பூஜை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல், சிறப்பு இன்னிசை கச்சேரி ஆகிய நடந்தது. விழாவில் பொதுமக்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News