உள்ளூர் செய்திகள்
ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்த போது எடுத்தபடம்.

சிறுத்தை பீதியால் மக்கள் கலக்கம்: பாலக்கோடு பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணிப்பு

Published On 2022-05-19 09:14 GMT   |   Update On 2022-05-19 09:14 GMT
பாலக்கோடு பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் சிறுத்தையை கண்காணித்து வருகின்றனர்.
பாலக்கோடு, 

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த எர்ரனஹள்ளியில்  கடந்த சில தினங்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் சிறுத்தை ஊருக்குள் வந்து செல்கின்றது.  இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.  

இந்நிலையில்  நேற்று அப்பகுதியில் மழையின் காரணமாக  இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.
இதனால் பொதுமக்கள் பீதியில் வீடுகளில் முடங்கி யிருந்த நிலையில் இரவு சிறுத்தை கிராமத்திற்குள் வந்து கோழியை தூக்கி சென்றுள்ளது. இதனை அறிந்து அப்பகுதி மக்கள்  பணிகளுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர். 

இதனால் வனத்துறை யினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க,  எந்த இடத்தில் பதுங்கி உள்ளது என்பதை  கண்காணிக்க, நேற்று வனவர் முனுசாமி தலைமையில் வனத்துறையினர். 
சிறுத்தை பதுங்கி உள்ள காவேரியப்பன் கொட்டாய், எருது குட்டஹள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள காப்புகாடுகளில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்தனர். 

ஆனால் சிறுத்தை தென்படாததால், பாறை இடுக்குகளில் பதுங்கி இருக்கலாம் என வனத்துறையினர் தொடர்ந்து வனப்பகுதியை சுற்றிலும் ரோந்து சென்று வருகின்றனர்.
 மேலும்  ட்ரோன் கேமரா மூலம் சிறுத்தை நடமாட்டத்தை கண்கானித்து வருகின்றனர். ஆனால் இதுவரை சிறுத்தை வனத்துறையினர் கண்ணில் படாமல் சுற்றி வருகிறது.
Tags:    

Similar News