உள்ளூர் செய்திகள்
மாணவி ஜெர்லின் அனிகாவுக்கு மதுரை ரெயில் நிலைத்தில் கவுன்சிலர் போஸ்முத்தையா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது

தங்கம் வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு

Published On 2022-05-18 11:29 GMT   |   Update On 2022-05-18 11:29 GMT
ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில் தங்கம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மதுரை 

மதுரை மாநகராட்சி பள்ளி மாணவி ஜெர்லின் அனிகா. இவர் மதுரை மாநகராட்சி அவ்வை மேல்நிலை பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மதுரை வில்லாபுரத்தில் உள்ள கவுன்சிலர் போஸ் முத்தையாவின் போஸ் மெமரிக் பேட்மிட்டன் கிளப்பில் முதலில் பயிற்சி பெற்றார். பின்னர் பயிற்சியாளர் ஒலிவா சரவணன் கிளப்பில் பயிற்சி பெற்று தனது தகுதியை வளர்த்துக் கொண்டார்.

அண்மையில் பிரேசிலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவு க்காக விளையாடி 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். இதன் மூலம் மாணவி, இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
 
வாய் பேசாத, காது கேளாத நிலையில்  சிறப்பாக விளையாடி 3 தங்கங்களை வென்று உள்ளார்.  இதற்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர் ஊக்கப்ப டுத்திய கலெக்டர் மற்றும் மாநகராட்சி ஆணையாள ருக்கும் மாணவியின் குடும்ப த்தினர் நன்றி தெரிவித்த னர். தங்கம் வென்ற மாணவி இன்று மதுரை வந்தார். 

மதுரை ெரயில் நிலையம் வந்த அவரை மாநகராட்சி கவுன்சிலர் போஸ் முத்தையா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சி யில் பள்ளி மாணவிகள் விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News