உள்ளூர் செய்திகள்
கனமழையால் பஞ்சப்பள்ளி அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேதம் அடைந்த கட்டிடத்தை படத்தில் காணலாம்.

தருமபுரி மாவட்டத்தில் 4-வது நாளாக இடி மின்னலுடன் மழை

Published On 2022-05-18 10:10 GMT   |   Update On 2022-05-18 10:10 GMT
தருமபுரி மாவட்டத்தில் 4-வது நாளாக இடி மின்னலுடன் மழை பெய்தது.
தருமபுரி, 

தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சியால் வெப்பச்சலனம் காரணமாக இரவு நேரங்களில் இடியுடன் கூடிய தொடர் மழை கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.

இந்த நிைலயில் நேற்றுகாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இரவு 7 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இது சுமார் இரவு முழுவதும் பல  இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி   அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். 
இப்பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக 10-க்கும் மேற்பட்ட  பெரிய ராட்சத மரங்கள் பள்ளியை சுற்றிலும் இருக்கிறது. 

கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால்  பெரிய  ராட்சத தைலமரம் வேரோடு பள்ளி கட்டிடத்தின் மீது விழுந்து சேதம் ஏற்பட்டது. கட்டிடத்தில் உள்ளே யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு வேரோடு சாய்ந்த மரத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று இரவு பெய்த மழையின் அளவு தருமபுரி 10 மி.மீட்டர், பாலக்கோடு 9.40 மி.மீட்டர், மாரண்டஅள்ளி 8 மி.மீட்டர், ஒகேனக்கல் 62 மி.மீட்டர், அரூர் 9 மி.மீட்டர், பாப்பிரெட்டிப்பட்டி 32 மி. மீட்டர் என மொத்தம்  161.40 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் சராசரியாக 23.06 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News