உள்ளூர் செய்திகள்
யூனியன் கூட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம்.

சாத்தான்குளம் யூனியன் கூட்டம்

Published On 2022-05-18 09:31 GMT   |   Update On 2022-05-18 09:31 GMT
சாத்தான்குளத்தில் யூனியன் கூட்டம் யூனியன் தலைவர் ஜெயபதி தலைமையில் நடந்தது
சாத்தான்குளம்:

சாத்தான்குளம் யூனியன் கூட்டம் யூனியன் தலைவர் ஜெயபதி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய ஆணையாளர் ராஜேஷ் குமார், ஒன்றியக்குழு துணைத்தலைவர் அப்பாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் ஒன்றிய குழு கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள். 

கூட்டத்தில்  சாத்தான்குளம் ஒன்றியத்தில் 2022- 2023-ம் ஆண்டு 15வது நிதிக்குழு திட்டத்தில் முதலூர், பள்ளக்குறிச்சி, அரசூர், நடுவக்குறிச்சி, கொம்மடிக்கோட்டை, பன்னம்பாறை, கோமானேரி, சாஸ்தாவிநல்லூர், பெரியதாழை, புத்தன்தருவை கிராம பஞ்சாயத்துகளில் 16 திட்டப்பணிகளை செய்வது என அனுமதிக்கப்பட்டது. 

கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறை–வேற்றப்பட்டன. தட்டச்சர் மதன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் ஒன்றிய குழு கவுன்சிலர்கள் லதா, குருசாமி, மேரி 

பொன்மலர்,  சுபா கிறிஸ்டி பொன்மலர், மீனா முருகேசன், சுதாகர், சசிகலா, ஜேசு அஜித், ஜோதி, செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒன்றிய உதவி பொறியாளர்கள் அருணா, கீதா, உதவியாளர் ஜெயசித்ரா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். 
Tags:    

Similar News