உள்ளூர் செய்திகள்
காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய போலீசார்.

நாட்டறம்பள்ளியில் போலீஸ் நிலையம் முன்பு உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-05-14 10:45 GMT   |   Update On 2022-05-14 10:45 GMT
நாட்டறம்பள்ளியில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்ததால் போலீஸ் நிலையம் முன்பு உறவினர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஜோலார்பேட்டை :

ஜோலார்பேட்டை அடுத்த திரியாலம் பொம்மிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சேகர் இவரது மகன் சூர்யா (வயது21) இவர் கர்நாடக மாநில பெங்களூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

நாட்டறம்பள்ளி அடுத்த மகாத்மா காந்தி தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை இவரது மகள் அபிலாஷா (21) இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இருவரும் நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் போது பழக்கம் ஏற்பட்டு கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 1-ந் தேதி சூர்யாவும் அபிலாஷாவும் வீட்டை விட்டு வெளியேறி கோயம்புத்தூர் காந்திநகர் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இது குறித்து தகவலறிந்ததும் அபிலாஷா வின் பெற்றோர் இருவரும் வீட்டிற்கு வந்து விடுங்கள் நாங்களே திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறியுள்ளனர். இதனை நம்பி காதல்  ஜோடி நாட்டறம்பள்ளிக்கு சென்றனர்.

அப்போது அபிலாஷா வின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காதல்  ஜோடிகளை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது இதனால் பதற்றமடைந்த காதல் ஜோடி நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

அதன் பிறகு பெண் வீட்டார் தங்களுடன் பெண்ணை அனுப்பி வைக்க வேண்டும் என கூறி போலீஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் பெற்றோர்களிடம் பெண் மேஜர் என்பதால் அவர் விருப்பப்பட்டால் தாங்கள் அழைத்து செல்லலாம் என தெரிவித்தனர். அபிலாஷா தனது காதல் கணவருடன் செல்வதாக கூறினார். இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News