உள்ளூர் செய்திகள்
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன்

நெல்லையில் காவல்துறை வாகனங்கள் 18-ந்தேதி ஏலம்

Published On 2022-05-09 09:54 GMT   |   Update On 2022-05-09 09:54 GMT
போலீசார் பயன்படுத்திய வாகனங்கள் நெல்லையில் வருகிற 18-ந் தேதி ஏலம் விடப்படுகிறது.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட போலீஸ் வாகனங்கள் வருகிற 18-ந்தேதி பொது ஏலம் விடப்படுகின்றன.

இதுகுறித்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லை மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிக்கப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் 6 மற்றும் இரு சக்கர வாகனங்கள் 28 என மொத்தம் 34 வாகனங்கள்  ஏலம் விடப்பட உள்ளது.  அவை தற்போது உள்ள அதே நிலையில் வருகிற 18-ந் தேதி காலை 10 மணிக்கு நெல்லை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் விடப்பட உள்ளன.

ஏலம் எடுக்க விரும்புவோர் வருகிற 17-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நெல்லை மாவட்ட ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிடலாம்.

அதே நாளில் மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.1,000 மற்றும் 4 சக்கர வாகனத்திற்கு ரூ.2 ஆயிரம் வீதம் முன்பணம் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் அதற்கு உண்டான சரக்கு மற்றும் சேவை வரி (மோட்டார் சைக்கிளுக்கு 12 சதவீதம் மற்றும் 4 சக்கர வாகனத்திற்கு 18 சதவீதம்) முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News