உள்ளூர் செய்திகள்
முனீஸ்வரர் கோவில் திருவிழா

ஜோலார்பேட்டை பகுதியில் முனீஸ்வரர் கோவில் திருவிழா

Published On 2022-05-09 09:49 GMT   |   Update On 2022-05-09 09:49 GMT
ஜோலார்பேட்டை பகுதியில் முனீஸ்வரர் கோவில் திருவிழா நடைபெற்றது.
ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சாலை நகரில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் முனீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. 

திருப்பத்தூர், வேலூர் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், பெங்களூர், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் அமாவாசை தினத்தன்றும் முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜையும் அபிஷேகமும் ஆடு கோழி ஆகியவற்றை பலியிட்டு தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் ஊர் சார்பில் முனீஸ்வரருக்கு திருவிழா நடத்தி வருகின்றனர். 

இந்த வருடத்திற்கான திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜை மற்றும் ஆடு கோழிகளை பலியிட்டு பொங்கல் இட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். 

இதுமட்டுமல்லாமல் புதிதாக வாங்கிய வாகனங்களை பூஜை செய்து வழிபட்டனர். அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் பரம்பரை அறங்காவலர் மஞ்சுல ராமச்சந்திரன் கோயில் பூசாரி சிவலிங்கம் உள்ளிட்டோர் பக்தர்களுக்கு சிறப்பு பூஜை செய்து நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News