உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் தம்பதியிடம் நகை-பணம் திருட்டு

Update: 2022-05-06 08:10 GMT
மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் தம்பதியிடம் நகை-பணம் திருட்டு : போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
கன்னியாகுமரி:

குழித்துறை அடுத்த குறுமந்தூர் புல்லுவிளை பகுதியை சேர்ந்தவர் டேவிட் ராஜ் (வயது 54). இவர் தனது மனைவியுடன் சென்னையில் உள்ள ஒரு திருமண விழாவிற்கு சென்றுவிட்டு அரசு பஸ் மூலம் அதிகாலையில் மார்த்தாண்டம் புதிய பஸ் நிலையத்தில் வந்து இறங்கி உள்ளார். 

அப்போது அவரது மனைவி கையில் இருந்த ைபயை கணவரிடம் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். 

அருகாமையில் டேவிட் ராஜ் நின்றுள்ளார். கழிவறைக்கு சென்றவர் பத்து நிமிடத்திற்குள் வெளியே வந்து பார்த்தபோது அவரது கேன் பேக் மாய மாகி உள்ளது. இதனால் பதறிப்போன கணவன் மனைவி இருவரும் பக்கத்தில் நின்ற அவர்களிடமும், கடைக்காரரிடம் விசாரித்துள்ளனர். 

ஆனால் யாரும் பார்க்கவில்லை என அனைவரும் தெரிவித்துள்ளனர். அந்த பேக்கில் மூன்றரை பவுன் தங்க சங்கிலி, ரூ.12 ஆயிரம், ஒரு ஸ்மார்ட்போன் ஆகியவை இருந்துள்ளது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சமீபகாலமாக மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகிறது. அம்மா உண வகம் அருகாமையில் துர்நாற்றம் வீசிய நிலையில் காணப்படுகிறது. தினசரி பஸ் நிலைய சுற்றுவட்டார பகுதிகளில் மது பாட்டில்கள் குவிந்தவண்ணம் காணப்படுகிறது. 

பஸ் நிலையம் முழுவதும் சிசிடிவி கேமராக்களை பொருத்தி 24 -மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போட்டு பொதுமக்களையும், பயணிகளையும், வியாபாரிகளையும் பாது காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News