உள்ளூர் செய்திகள்
உப்பிலியபுரத்தில் தீமிதி திருவிழா நடந்த போது எடுத்த படம்.

உப்பிலியபுரம் கோவில்களில் தீமிதி திருவிழா

Published On 2022-05-04 10:10 GMT   |   Update On 2022-05-04 10:10 GMT
உப்பிலியபுரத்தில் கோவில்களில் தீமிதி திருவிழா நடை பெற்றது.
உப்பிலியபுரம் ஒன்றியம் பச்சபெருமாள்பட்டி ஊராட்சி தங்கநகரில் உள்ள பெரிய மாரியம்மன், தங்கநகரை ஒட்டியுள்ள குண்டுக்கல் சின்ன மாரியம்மன் கோவில்களிலுள்ள அம்மனுக்கு திருவிழா நடைபெற்றது.  

திருவிழாவை முன்னிட்டு, பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், கரும்பாலை தொட்டி ஆகியன நடைபெற்றன. பிள்ளை வரம் வேண்டுபவர்கள் கரும்புகளில் தொட்டில் கட்டி தூக்கிச் செல்வது இங்கு சிறப்பு.  

குழந்தை பிறந்தவுடன் கரும்புகளில் தொட்டில் கட்டி குழந்தையை படுக்க வைத்து கணவனும் மனைவியும் தூக்கிச் சென்று நேர்த்திக்கடன் செய்வது இங்கு மரபாகும்.

குண்டுக்கல் சின்ன மாரியம்மன் கோயில் முன்பு 3 அடி அகலம் 3 அடி ஆழம் 16 அடி நீளத்திற்கு குழி வெட்டி, காலை வேளையில் பூஜைகளுடன் தீக்குண்டம் பற்ற வைக்கப்பட்டது.

நேற்று மாலை தீ குண்டத்தில் 9 பெண்கள் ஒருவர் பின் ஒருவராக தீ குண்டத்தில் இறங்கி சென்று, நேர்த்திக்கடன்களை முடித்து அம்மனை வழிபாடு செய்தனர்.
 

தீ மிதி திருவிழாவை காண ஏராளமான வெளியூர் பக்தர்கள் அப்பகுதிக்கு வந்திருந்து, அம்மனை தரிசித்துச் சென்றனர்.

Tags:    

Similar News