உள்ளூர் செய்திகள்
சீவலப்பேரி பள்ளியில் மாணவர்களிடம் போலீசார் பேசிய போது எடுத்தபடம்.

நெல்லை மாவட்டத்தில் மாணவர்களிடையே சமூக நல்லிணக்க விழிப்புணர்வு

Published On 2022-05-02 09:55 GMT   |   Update On 2022-05-02 09:55 GMT
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காவல்துறையினர் சமூக நல்லிணக்கம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காவல்துறையினர் சமூக நல்லிணக்கம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் நேரில் சென்று மாணவர்களுக்கு சமூக நல்லிணக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

அப்போது காவல்துறையினர் மாணவர்களிடம் இன்றைய சமுதாயத்திற்கு சமூக நல்லிணக்கம் மிக மிக அவசியமானதாகும். நாம் நம்மை சுற்றி இருப்பவர்களோடும் நம்முடன் தொடர்பில் இருப்பவர்களோடும் என்றும் ஜாதி,மத வேறுபாடுகளை பார்க்கக் கூடாது என அறிவுரை கூறினர்.

எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்ற உயரிய சிந்தனையோடு பேசி பழக வேண்டும் மாணவர்களாகிய நீங்கள் தான் எதிர்காலத்தில் நாட்டை ஆளப் போகும் தலைவர்களாகவும் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குவராக வரபோகிறவர்கள் என்றும் கூறினர்.

மேலும் பள்ளிகளில் ஜாதி அடையாளங்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.
Tags:    

Similar News