உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

Published On 2022-04-28 08:23 GMT   |   Update On 2022-04-28 08:23 GMT
சிக்சா சில்பி என்ற தலைப்பின் கீழ் சரிவிகித உணவு என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர்களுக்கு இணையவழியில் கட்டுரை எழுதும் போட்டியை நடந்தது
மடத்துக்குளம்:

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விக்யான் பிரச்சார் நிறுவனம், என்சிஆர்டி மற்றும் விபா ஆகியவை இணைந்து சிக்சா  சில்பி என்ற தலைப்பின் கீழ் சரிவிகித உணவு என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர்களுக்கு இணையவழியில் கட்டுரை எழுதும் போட்டியை நடத்தியது. 

அப்போட்டியில் தமிழகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 

அவர்களின் கட்டுரையை மதிப்பீடு செய்வதற்காக உடுமலை ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியின் பேராசிரியர்கள் மலர்விழி, உமாதேவி, வைஷ்ணவி, புவனேஸ்வரி மற்றும் உடுமலை அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள்  திருமூர்த்தி, கருணாநிதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு,  மதிப்பீட்டு பணியினை சிறப்பாக செய்து முடித்தனர். 

மதிப்பீட்டு பணியை செய்து முடித்ததற்காக சான்றிதழ் மற்றும் நினைவு பரிசினை ஆகார்கிராந்தி தேசிய ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் கலிலியோ அறிவியல் கழக உறுப்பினர் சதீஷ்குமார் , ஜிவிஜி. கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரி ஆகியோர் வழங்கினர்.
Tags:    

Similar News