உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

குழித்துறை அருகே கட்டிட தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது

Update: 2022-04-15 07:43 GMT
குழித்துறை அருகே கட்டிட தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி:

காப்புகாட்டை அடுத்த மங்காட்டை சேர்ந்தவர் சகீன் (வயது26) கட்டிட தொழிலாளி. இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த மார்டின் லிபின் (18) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. 

குடிபோதையில் இருந்த மார்டின் லிபின், சகீனிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது மோட்டார் சைக்கிள் செயினினால், சகீனின் தலையில் பலமாக அடித்தார். இதில் தலை உடைந்து ரத்தவெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்துள்ளார். 

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  சம்பவ இடத்திற்கு  சென்ற போலீசார் விசாரணை  நடத்தினர். பின்னர் மார்டின் லிபினை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து  மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News