உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

திருவையாறில் 14-ந் தேதி தமிழிசை பொன்விழா

Published On 2022-04-12 08:42 GMT   |   Update On 2022-04-12 08:42 GMT
திருவையாறில் வருகிற 14-ந் தேதி தமிழிசை பொன்விழா நடைபெறுகிறது

திருவையாறு:

திருவையாறு அரசர் கல்லூரி வளாகத்தில் ஆண்டுதோறும் தை மாதம் முதல் நாள் தொடங்கி தொடர்ந்து மூன்று நாட்கள் தமிழிசை விழா நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2

ஆண்டுகளாக கொரோனா தொற்றால் விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்த காரணத்தால் தமிழிசை விழா நடத்த முடிவு செய்யப்-பட்டது. அதன்படி தமிழிசை

 விழாவின் 50-ம் ஆண்டு பொன்விழா என்பதால் இந்த ஆண்டு சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டில் (14-ந் தேதி) கொண்டாடப்பட உள்ளது. விழாவினை தருமையாதீனம் ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த

பரமாச்சாரிய சுவாமிகள் திருவி-ளக்கு ஏற்றி தொடங்கி வைத்து அருளாசி வழங்குகிறார். தமிழிசை மன்றத் தலைவர் செல்வராஜ் தலைமை வகிக்கிறார். முதல் நாள் நிகழ்ச்சியில் எஸ்.எஸ். பழநிமாணிக்கம்

எம்.பி, துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ, தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமதன், முன்னாள் அமைச்சர் சி.நா.மி. உபயதுல்லா, அரசு இசைக்கல்லூரி முதல்வர் உமா மகேஸ்வரி, அரசர் கல்லூரி

முதல்வர் ரவிச்சந்-திரன், ஒன்றியப் பெருந்தலைவர் அரசாபகரன் மற்றும் பேரூராட்சித் தலை வர் கஸ்தூரி நாகராஜன் ஆகியோரும், இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்

 ரத்தினசாமி, மணத்திடல் சுப்பிரமணியன் ஆகியோரும், நிறைவு நாள் நிகழ்ச்சியில் ஜி.கே.வாசன் எம்.பி., தியாகப் பிரும்ம மகோத்சவ சபா அறங்காவலர் சுரேஷ் மூப்பனார், டெக்கான் மூர்த்தி

மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. ரெங்கசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகி-ன்றனர்.

முதல் நாள் இரவு 8.15 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சியாக அழகு. பன்னீர் செல்வம் குழுவினரின் இன்னிசை பட்டி மன்றமும், இரண்டாம் நாள் சிறப்பு நிகழ்ச்சியாக இரவு 8.45-க்கு புலவர்

 சண்முக வடிவேலு குழுவினரின் வழக்காடு மன்றமும், நிறைவு நாள் சிறப்பு நிகழ்ச்-சியாக பானுமதி ராஜரெத்தினம் குழுவினரின் நாட்டுப்புற ஆடல் பாடல் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.

தமிழிசைப் பொன்விழாவிற்கான ஏற்பாடுகளை திருவையாறு தமிழிசை மன்ற நிர்வாகிகள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News