உள்ளூர் செய்திகள்
கொடிமரத்தில் இன்று காலை கொடியேற்றப்பட்ட காட்சி.

குலசேகரன்பட்டினம் வீரமனோகரி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடக்கம்

Published On 2022-03-27 09:18 GMT   |   Update On 2022-03-27 09:18 GMT
குலசேகரன்பட்டினம் வீரமனோகரி அம்மன் கோவிலில் 10 நாட்கள் நடக்கும் சித்திரை திருவிழா தொடங்கியது.
உடன்குடி:

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் வடக்கூரில் உள்ள வீரமனோகரி அம்மன் கோவில் தென்மாவட்டங்களில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும்.

இங்கு சித்திரை திருவிழா ஆண்டு தோறும் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இத்திருவிழா இந்த ஆண்டு இன்று (27-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காலை அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.காலை 7 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடி யேற்றபட்டது.

பின்புகொடிமரத்திற்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்திற்கு பல்வேறு தீபாராதனைகளுக்கு பின், ஆலயத்திற்கு வந்த பக்தர்களுக்குபிரசாதம் வழங் கபட்டது.

விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை, காலை மற்றும் மாலையில் அம்மன் சப்பர பவனி நடைபெறும்.

விழா வருகிற 5-ந்தேதி நிறைவுபெறும். இதற்கான ஏற்பாடுகளை  கோவில் பரம்பரை அறங்காவலர் அ.வீரபாகு வல்லவராயர் சிறப்பாக செய்து உள்ளார்.
Tags:    

Similar News