உள்ளூர் செய்திகள்
.

தங்க பத்திரம் விற்பனையில் நாமக்கல் மாவட்டம் முதலிடம்

Published On 2022-03-07 09:13 GMT   |   Update On 2022-03-07 09:13 GMT
தங்க பத்திரம் விற்பனையில் நாமக்கல் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

நாமக்கல்:

இந்திய அரசின் தங்க பத்திரம் திட்ட முதலீடு கடந்த பிப்ரவரி மாதம் 28&ந் தேதி முதல் மார்ச் 4-ந் தேதி வரை நடைபெற்றது. ஒரு கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ.5,150 என்று நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்பட்டது. 

நாமக்கல் கோட்டத்தில்  உள்ள பரமத்தி வேலூர் மற்றும் பல்வேறு அஞ்சலகத்தில் 3,873 கிராம் தங்க பத்திரம் விற்பனை செய்யப்பட்டது.

தமிழக அளவிலும் இந்திய அளவிலும் நாமக்கல் மாவட்டமானது முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. 

பிப்ரவரி மாதம் 28-ந் தேதி முதல் மார்ச் 4-ந்தேதி வரை 5 நாட்களில் நடைபெற்ற மொத்த முதலீட்டின் மதிப்பு 1 கோடியே 97 லட்சத்து 87 ஆயிரத்து 150 ரூபாய் ஆகும்.

இந்த வாய்ப்பை தவற விட்டவர்கள் அடுத்தடுத்து வரக்கூடிய தங்க பத்திரம் முதலீட்டில் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து பயன் பெறுமாறு அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News