உள்ளூர் செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலையுடன் கைதானவர்களை படத்தில் காணலாம்.

95 கிலோ புகையிலை பறிமுதல்: 2 பேர் கைது

Published On 2022-01-28 08:07 GMT   |   Update On 2022-01-28 08:07 GMT
ஆரல்வாய்மொழி அருகே 95 கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் புகையிலையை கட்டுப்படுத்த மாவட்ட சூப்பிரண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். புகையிலை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் ஆங்காங்கே சோதனை நடத்தி வருகிறார்கள். 

இதற்கிடையே தனிப்பிரிவு போலீசாருக்கு புகையிலை, வாகனங்களில் வருவது தெரியவந்தது ஆரல்வாய் மொழி சோதனைச்சாவடி அருகே தனிப்பிரிவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். 

அப்போது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூற அவர்களை ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்கள். ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணையின்போது நெல்லை மாவட்டம் வள்ளியூர் மறவர் காலனி மந்திரமுர்த்தீ (வயது 43). 

ஆலங்குளம் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார்(25) ஆகிய இருவரும் லோடு ஆட்டோவில் பல்வேறு இடங்களில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 95 கிலோ புகையிலை இருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து ஆரல்வாய்மொழி போலீசார் இருவரையும் கைது செய்து புகையிலை விற்பதற்கு பயன்படுத்திய லோடு ஆட்டோவை பறி முதல் செய்து விசாரித்து வருகிறார்கள்.

சுசீந்திரம்  சப்- இன்ஸ் பெக்டர் ஆறுமுகம்  தலைமை யில் போலீசார் வழுக்கம் பாறை சந்திப்பு  பகுதியில்  ரோந்து சென்ற போது, சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த மூன்று  நபர்களை பிடித்து விசாரித்தனர். 

விசாரணையில் அவர்கள் ராஜாவூர்  பகுதியை சேர்ந்த அருண்ஜெனித் என்ற ஜெனித் (25) மற்றும் வழுக்கம்பாறை பகுதியை சேர்ந்த சதீஷ் (20)  மற்றும் முத்துகிருஷ்ணன் (22) என்பது தெரியவந்தது. 

மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை செய்த போது கஞ்சா பதுக்கி வைத்து அந்த பகுதிகளில் விற்பனை செய்தது தெரியவந்தது. பின்பு அவர்கள் வைத்திருந்த 1.200 கிலோ  கஞ்சாவையும், விற்பனைக்கு பயன்படுத்திய 3 இரு சக்கர வாகனங்களையும்  போலீசார் பறிமுதல் செய்தனர்.  இதையடுத்து 3 பேர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
Tags:    

Similar News